உள்நாடு

நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து – மூவர் மருத்துவமனையில்

(UTV|ஹட்டன் )- ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக வேன் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தை பெண் சாரதி ஒருவரே செலுத்தியுள்ளதாகவும், சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான சிறு குழந்தை உள்ளிட்ட மூன்று பேரும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி ஐஸ் கிரீம் வகைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், விபத்து தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி

ஊடகவியலாளர்களுக்காக அடையாள அட்டை; மகிழ்ச்சியான செய்தி

மீனவர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் மரணம்!