சூடான செய்திகள் 1

நுகர்வோர் அதிகாரசபையின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV|COLOMBO)-நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் சிலர், கேகாலை மாவட்டத்தில் விற்பனை நிலையங்களை பரிசோதனை செய்த வேளையில் அவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த அதிகாரசபையின் அதிகாரிகள் இன்று(04) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் இன்று(04) சுற்றிவளைப்புகள் மற்றும் துறைசார் பணிகளிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகை காலத்தில் இவ்வாறு சுற்றிவளைப்புகளில் இருந்து விலகுதல், நுகர்வோரான மக்களுக்கு பாதகமான சூழல் என அகில இலங்கை நுகர்வோர் அதிகாரசபை விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் லங்கா திக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

முஸ்லிம் உலகம் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 891 ஆக அதிகரிப்பு

வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று…