உள்நாடு

நீர் கட்டணத்தை செலுத்த தவறியவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

(UTV | கொழும்பு) –  நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 2000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு உரிய ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர் நுகர்வோர்கள் எடுக்கும் தண்ணீருக்கான செலுத்தாத தொகை கிட்டத்தட்ட பத்து கோடி ரூபாய் அளவினதாகும்,

அதற்கமைய அரசியல், அரச நிறுவனங்கள், வர்த்தக ஸ்தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களுடன் தொடர்புடையவர்களும் இவ்வாறு நீர்க் கட்டணத்தைச் செலுத்தத் தவறியவர்களுள் அடங்குவர்.

மேலும் ஐந்து முதல் ஆறு லட்சம் வரையிலான பில்களை செலுத்தத் தவறியவர்களும் இந்தக் குழுவில் உள்ளதாக வாரியம் குறிப்பிடுகிறது.

இதேவேளை அவற்றின் குடிநீர் இணைப்பு ஏற்கனவே துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீள திறக்கப்படவுள்ள களனி பல்கலைக்கழகம்!

தேங்காய் எண்ணெய் மோசடி – அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆதரவும் – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

editor

அரிசியின் விலை குறைந்தது