உள்நாடு

நீர் கட்டணத்துக்கு சலுகை காலம்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் திட்டம் தொடர்பில்
தெளிவுபடுத்துவதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (08) இடம்பெற்றது இதன்போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்திலே​யே இடம்பெற்றது. அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது. சகலருக்கும் 2025 ஆம் ஆண்டில் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு வழிசமைக்கப்படும் என்றார்.

Related posts

தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் நாமல் ராஜபக்ஷ

editor

நடுநிலை பேணும் மனநிலையில் செயற்பட்ட முன்னாள் சபாநாயகருக்கு ரிஷாட் அனுதாபம்

துறைமுக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தம்