விளையாட்டு

நீச்சல் போட்டிகளிலிருந்தும் இலங்கை வெளியேறியது

(UTV |  டோக்கியோ) – நீச்சல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் நீச்சல் வீரர் மெத்தியூ அபேசிங்க எதிர்பார்ப்புகளையெல்லாம் சுக்குநூறாக்கி தகுதிச் சுற்றில் எட்டு பேர்களில் எட்டாவது இடத்தைப் பிடித்து ஏமாற்றினார்.

100 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியின் தகுதிச் சுற்றில் பங்கேற்ற மெத்தியூ அபேசிங்க இறுதி நேரத்தில் தனது வேகத்தை இழந்ததினால் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார். இதில் அவர் பந்தயத் தூரத்தை 50.62 செக்கன்களில் நீந்தினார். தகுதிச் சுற்றில் முதலிடம் வென்ற ஹொங்கொங் வீரர் 49,49 செக்கன்களில் நீந்தினார்.

இதில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை அமேனியா மற்றும் சைப்பிரஸ் வீர்கள் வென்றனர். இந்தப் போட்டியோடு நீச்சல் போட்டிகளிலிருந்தும் இலங்கை வெளியேறுகின்றது.

Related posts

பரபரப்பான சூழலில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்

ஷெஹான் கிரிக்கெட் வாழ்விற்கு முற்றுப்புள்ளி

21ஆவது பொதுநலவாய விளையாட்டுப்போட்டி நாளை ஆரம்பம்