சூடான செய்திகள் 1

நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு அழைப்பாணை

(UTVNEWS | COLOMBO) – எவன்காட் நிறுவனத்தின் தலைவா் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேரும் இந்த மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம் இன்று(12) அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபா் தப்புலடி லிவேராவினால் 7,573 குற்றச்சாட்டுக்களின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சட்டமா அதிபரால் நிரந்தர நீதாய மேல்நீதின்றில் நேற்று முன்தினம்(10) தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம்

கொரோனா வைரஸ் – பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

நாடாளுமன்றில் ஒழுக்க கோவையை மீறினால் உறுப்புரிமை நீக்கும் சட்டம்- நீதியமைச்சர்