உள்நாடுசூடான செய்திகள் 1

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சி!

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரும்  அல்லது கட்சியும் 50 வீத வாக்குகளை பெறமுடியாது என்பதால் கள் இடம்பெறுகின்றன என வெளியாகியுள்ள  தகவல்களால் அரசியல் வட்டாரங்களில் பெரும் குழப்பநிலையேற்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் ஏற்கனவே இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம்தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அமைச்சரவை பத்திரம் இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனவும் இறுதியாக நிறைவேற்று  அதிகார முறையை நீக்குவதா நிறைவேற்று அதிகார பிரதமர் ஊடாக நாடாளுமன்றத்தை வலுப்படுத்துவதா என்பது குறித்து சர்வஜனவாக்கெடுப்பு இடம்பெறும்.

இந்த நடவடிக்கைகள் குறித்து அறிந்ததும் பிரதான எதிர்கட்சிகள் ஏற்கனவே தங்கள் மத்தியில் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளன.

இதனை நாடாளுமன்றத்தில் எதிர்க்கப்போவதாக  எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.

2025 பொதுத்தேர்தல் வரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீடிக்கவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கருதுகின்றதுஇதற்போதைய அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை தொடர்வதற்கான ஆணையை பெற்றது என பொதுஜனபெரமுன கருதுகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதென்றால்  2025 பொதுத்தேர்தலிற்கு பின்னரே அதனை நீக்கவேண்டும் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கவேண்டும் என  பொதுஜனபெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என எப்போதும் குரல்கொடுத்துவந்துள்ள ஜேவிபி தற்போதைய முயற்சிகளை  நாடாளுமன்றத்தில் எதிர்க்கும் என தெரியவருகின்றது. 2025 பொதுத்தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் இந்த விடயம் குறித்து ஆராயவேண்டும் என ஜேவிபி கருதுகின்றது .

அடுத்த அரசாங்கம் மக்களின் ஆணையுடன்  பதவிக் வரும்  ஆகவே அதுவரை நாங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்து சிந்திக்க முடியாது –  2025 தேர்தலிற்கு முந்தைய முயற்சிகள்  வெற்றிபெறாது என ஜேவிபியின் சிரேஸ்ட நாடாளுமன்ற  உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ViraKesari

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமரின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தி

“நாடாளுமன்ற கலாச்சாரத்தை மாற்றுவோம்” – பிரதமர்

8 பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!