உள்நாடு

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரத்தை மோதித்தள்ளிய டிப்பர் வாகனம்

வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரத்துடன் டிப்பர் வாகனம் மோதி பாரிய விபத்து ஒன்றினை ஏற்படுத்திய சம்பவம் கேப்பாப்புலவு வீதியில் இன்று (26) இடம்பெற்றுள்ளது.

கேப்பாப்புலவு புதுக்குடியிருப்பு வீதியில் ஐங்கன்குள வயல் வெளி வீதிப்பகுதியில் வயல் வேலைக்காக வந்த உழவு இயந்திரம் வீதியின் ஓரமாக வயல் வேலி எல்லைப்பகுதியில் பெட்டியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து முள்ளியவளை நோக்கி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வீதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தின்போது உயிர்சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் உழவு இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளது

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related posts

சாதாரண – உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம்

போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பேரணி

சிறுவர்களுக்கு வேகமாக பரவும் இன்புளுவன்சா A வைரஸ்