உள்நாடு

நிர்க்கதியான இலங்கையர்கள் 14 பேர் நாட்டிற்கு வருகை

(UTVNEWS | COLOMBO) – வெளிநாடுகளிலுள்ள விமான நிலையங்களில் சிக்கித் தவித்த 14 பேர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிங்கப்பூரில் இருந்து 9 பேரும், கட்டாரில் இருந்து 5 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளிலுள்ள விமான நிலையங்களில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் 33 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியளாளர் சந்திப்பின் போது அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பம்

அறநெறி பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

வாக்கெடுப்பை புகைப்படம் எடுத்தால் 7 ஆண்டுகள் சட்டசபைக்கு நுழைய தடை