உள்நாடு

நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் இலஞ்ச ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) –  முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பெண்டோரா ஆவணத்தில் திருக்குமரன் நடேசன் மற்றும் அவரது மனைவி நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஆணைக்குழுவின் அழைப்பின்பேரில் திருக்குமரன் நடேசன் குறித்த ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.

Related posts

2021.03.01 : அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

வரி அதிகரிப்புக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு நிர்ணய விலை – நளின் பெர்னாண்டோ.

அரசியலமைப்பு சபை மீண்டும் இன்று கூடவுள்ளது.