வகைப்படுத்தப்படாத

நியூ மெக்சிகோ பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு

(UTV|MEXICO)-நியூ மெக்சிகோவின் வடமேற்கு பகுதியில் உள்ள அஸ்டெக் நகரில் ஒரு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று  (வியாழக்கிழமை) துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்த போலீசார் அனைவரையும் வெளியேற்றி பள்ளி வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதோடு துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மாணவர்களா அல்லது ஆசிரியர்களா என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தையடுத்து அந்த பள்ளியை மூடிய போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Indian finds missing father in SL after 21 years through YouTube video

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலம் நிராகரிப்பு

குகுலே கங்கை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு