கேளிக்கை

நித்யா மேனன் காதலில் விழுந்தாரா?

(UTV|INDIA) வெப்பம், ஓ கே கண்மணி, காஞ்சனா 2, மெர்சல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் ஜெயலலிதா வேடம் ஏற்று நடித்து வருகிறார். மேலும் 2 இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். நித்யாமேனன் அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் அவரிடம் கால்ஷீட் பெறுவது இயக்குனர்களுக்கு பெரும்பாடான காரியமாகவே உள்ளது.

பல்வேறு கண்டிஷன்களை போட்டு கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறாராம். நித்யாமேனன் ஏற்கனவே நடிகர் ஒருவரை காதலிப்பதாக கிசுகிசு பரவியது. அந்த நடிகருடன் அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் நெட்டில் வெளியானது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த பேச்சு புஷ்வானமாகிப்போனது.

இந்நிலையில் நித்யா மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நபரை கட்டி அணைத்து உள்ளார். மேலும் அந்த புகைப்படத்துடன் ஃப்ரண்ட் லவ் ஹாப்பினஸ் என குறிப்பிட்டிருக்கிறார். அதை கண்ட ரசிகர்கள், இவர் யார் உங்களுடைய காதலனா? என கேட்டுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

விஜய் 65ஆவது படத்தில் இரட்டை நாயகிகள்

பிரியங்கா சோப்ரா மனிதாபிமான விருதுக்கு தெரிவு

“ரூம்’ல தனியா விடாதீங்க.. நாம முழிச்சக்கணும்.. எனக்கும் 2 குழந்தைங்க ..” – கார்த்தி