சூடான செய்திகள் 1

நிதியொதுக்கீட்டில் மீனவக்குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி அமைச்சர் ரிஷாட்டின் வைப்பு!

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட 534 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (06) மன்னார், காட்டாஸ்பத்திரி மைதானத்தில் இடம்பெற்றது.

மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன்,  வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், முசலிப் பிரதேச சபை தவிசாளர் சுபியான், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி அன்ஸில் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பேசாலை வடக்கு – மேற்கு, முருகன் கேவில், காட்டாஸ்பத்திரி, வசந்தபுரம், தலைமன்னார் கிராமம், தலைமன்னார் பியர், சிறுதோப்பு, தோட்டவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவக் குடும்பங்களுக்கு இந்த வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

-ஊடகப்பிரிவு-

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

நேற்றைய 600 PCR பரிசோதனை முடிவுகளும் இன்று வெளியாகும்

வடக்கில், 18,585 குடும்பங்களைச் சேர்ந்த 60,345 பேர் பாதிப்பு

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு