வகைப்படுத்தப்படாத

நிதியமைச்சர் சுங்கத் திணைக்களத்திற்கு திடீரென விஜயம்

(UDHAYAM, COLOMBO) – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சுங்கத் திணைக்களத்திற்கு திடீரென விஜயம் செய்து அதன் நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.

சுங்கத் திணைக்களத்தின் ஒருகொடவத்தயில் உள்ள இரண்டு கொள்கலன் பிரிவுகளுக்கு விஜயம் செய்த பின்னர் நிதியமைச்சர், சுங்க தலைமையகத்திற்கு சென்று அதன் பணிகளை கண்காணித்தார்.

சுங்கத் திணைக்களத்தின் பணிகள் மந்தகதியில் இடம்பெறுவதான குற்றச்சாட்டை அடுத்து அதனைக் கண்காணிப்பதற்காக நிதியமைச்சர் அங்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்தார்.

கொள்கலனை விடுவிப்பதற்காக அங்கு வருகை தந்திருந்த இறக்குமதி பிரதிநிதிகளுடன் அமைச்சர் சினேகபூர்வமாக உரையாடினார்.

Related posts

කොස්තාපල්වරයකුට පහරදුන් මන්ත්‍රි ශාන්තගේ පුත් ඇප මත මුදාහැරේ

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா?

மிமிக்ரி செய்து அசத்திய டிரம்ப்