உள்நாடு

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மனுஷ நாணயக்காரவின் சகோதரர் விளக்கமறியலில்

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்றைய தினம் (29) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக வாக்குறுதியளித்து, 40 இலட்சம் ரூபா பணம் கேட்டு அதில் 30 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

புத்தாண்டிற்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம் – விஜயதாச

மேலும் 765 பேர் பூரணமாக குணம்

பட்டதாரிகளுக்கான அறிவித்தல்