உள்நாடு

நிக்கவெரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விஷேட குழு

(UTV|குருநகல்) – நிக்கவெரட்டிய, கொட்டவெஹர பகுதியில் மாணவி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மூவர் அடங்கிய குழு ஒன்று அப்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டவெஹெர பிரதேசத்தில் 13 வயதான சிறுமி ஒருவரை அந்த சிறுமியின் இரண்டாவது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய கிராம சேவகர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குறித்த குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?

குத்தகை முறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து வாகனங்களுக்கு சலுகை

நேற்று இனங்காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் வழங்கிய முகவரி தவறானது