உள்நாடு

நாளை முதல் ரயில் நிலையங்களில் விசேட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறை

(UTV | கொழும்பு) – நாளை முதல் ரயில் நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையான முறையில் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முகக் கவசம் அணிதல், கை கழுவதல் மற்றும் வெப்பநிலை பரிசோதனை ஆகிய சுகாதார நடைமுறைகள் நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளன.

நாடு முழுவதும் அமைந்துள்ள ரயில் நிலையங்களில் இந்த சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘சாணக்கியனுக்கு எதிராக நடவடிக்கை’ – பிரதமர்

வெலிக்கடை கைதிகள் கொலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸி அணியினர்