உள்நாடு

நாளை முதல் தொடர் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நாளை (24) ஒரு மணி நேரமும், நாளை மறுதினம் (25) முதல் சுமார் 2 மணி நேரமும் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஏற்பட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இன்று (23) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாளை (24) முதல் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருந்தாலும், அதனை மேலும் இரண்டு மணி நேரமாக நீடிக்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இந்த செயன்முறையை தொடர முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இலங்கை மின்சார சபை நிச்சயமாக 4 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

அரச கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளை முதல் விசேட சோதனை

பட்டமளிப்பு நிகழ்வு குறித்து கொழும்பு பல்கலைக்கழகம் அறிக்கை