உள்நாடு

நாளை மறுநாள் முதல் அரசு அலுவலகங்கள் வழமை போல் செயல்படும்

(UTV | கொழும்பு) – அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை மாத்திரம் அழைப்பதைக் கட்டுப்படுத்தி ஜூன் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தை நாளை (24) வரை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு வரக்கூடும் எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Related posts

தென்னை அபிவிருத்தி சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளரின் ஊடக சந்திப்பு!

இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்

பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினை அகற்ற கோரிக்கை