அரசியல்உள்நாடு

நாளை கூடவுள்ள பாராளுமன்றம்

பாராளுமன்றம் நாளை (07) முதல் 10 ஆம் திகதி வரை கூடவுள்ளது.

சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கு அமைய ஜனவரி 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை “மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024” தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

Related posts

மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் – வஜிர அபேவர்தன

editor

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

இராஜாங்க அமைச்சர்கள் திங்களன்று பதவியேற்க உள்ளனர்