உள்நாடு

நாளை இரவு முதல் கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளில் நாளை (28) இரவு 10 மணி முதல் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 2, 3, 4, 5, 7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு சனிக்கிழமை (29) காலை 10 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டுத் திட்டத்தின் ஒரு அங்கமான புனரமைப்புத் திட்டப் பகுதியே நீர் வெட்டுக்குக் காரணம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

அம்பாறையில் ஹர்த்தால் பிசுபிசிப்பு-மக்கள் அன்றாட நடவடிக்கையில் ஈடுபாடு.

தங்கத்தின் விலை- இன்றைய நிலவரம்

மைத்திரியை அழைக்க தயாராகிய CID!