உள்நாடு

நாளை 12 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக மின்னேரியா – மின்னேரியா நகரம், ரொட்டவெவ, ரஜஎல, முவன்பெலஸ்ஸ, ரஜஎலகம, புராணகம, மினிஹிரிகம, சீ.பி. புர மற்றும் பட்டுஒய பிரதேசங்களில் நாளை(16) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை காலை 9.00 மணி முதல் கொத்தலாவல, கிரிதலே, சமகிபுர, அக்போபுர, புபுல, பத்கம்பத்துவ, ரத்மலே மற்றும் கிரிதலே மக்கள் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை ஹிங்குரக்கொட நகரம், பாலுவெவ, தொரதெக, சாமபுர, கிம்புலாவெல, கம் உதாவ, ஹதமூன, போகஸ்ஹந்திய, ஜயபுர மற்றும் குமாரகம ஆகிய பகுதிகளுக்கும் அத்தோடு பெந்திவெவ, சரணசிரிகம, யாய ஹதர, யாயதுன, மாலகபுர, நிக்கவெவ, சுதுகந்த மற்றும் தம்பலவெவ ஆகிய பிரதேசங்களுக்கும் நீர்விநியோகம் துண்டிக்கப்படும்.

Related posts

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை!

தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை இழக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்