சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமாரவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

(UTV|COLOMBO)-பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் 08ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரச தலைவர்களை கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா பேசியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் மியன்மாரில் கைது (VIDEO)

பூகொட பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு