உள்நாடு

நாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை  நீக்கம்

(UTV|கொழும்பு) – 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் மூலம் 30 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷ மற்றும் 5 பேருக்கு எதிராக மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் தற்போது கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரட்ண பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை 2020 ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரை நீக்கியுள்ளார்.

Related posts

யாழ் பல்கலைக் கழகத்தில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்!

பிரதமரின் பொசொன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி

ஈஸ்டர் தாக்குதல்: பிரதிவாதி மீது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு