உலகம்

நான்கு வகையாக உருமாறிய கொரோனா

(UTV |  ஜெனீவா) – சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் இதுவரை நான்கு வகையான உருமாறிய கொரோனா வகைகள் உலகெங்கும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் சீனாவில் முதல்முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலகெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவியது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்றைப் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர்.

இந்த உருமாறிய கொரோனா வகை வேகமாகப் பரவும் என்பதால் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் உலகெங்கும் பல அசாதாரண சுகாதார பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது உலகில் நான்கு வகையான உருமாறிய கொரோனா வைரஸ் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

Related posts

இந்திய இராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து : 9 வீரர்கள் பலி, ஒருவர் காயம்! – லடாக்கில் சம்பவம்

பிரபல பாலிவுட் பாடகர் KK காலமானார்

போரிஸ் ஜான்சன் சாதாரண சிகிச்சை பிரிவில்