விளையாட்டு

நான்காவது முறையாகவும் ஸ்பெயின் அணி செம்பியன்.

2024ம் ஆண்டின் யூரோ கால்பந்தாட்ட கிண்ணத்தை ஸ்பெயின் அணி கைப்பற்றியுள்ளது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 – 1 என தோற்கடித்த ஸ்பெயின் வெற்றி மகுடம் சூட்டியுள்ளது.

இதற்கமைய நான்காவது முறையாகவும் யூரோ கால்பந்தாட்ட கிண்ணத்தை ஸ்பெயின் அணி கைப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.

1964, 2008 மற்றும் 2012ம் ஆண்டுகளிலும் ஸ்பெயின் கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.

நான்கு முறை குறித்த கிண்ணத்தை வென்ற முதல் அணியாகவும் ஸ்பெயின் கால்பந்தாட்ட அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லசித் மலிங்க பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் [VIDEO]

வரலாற்றில் முதல் தடவையாக; இலக்கங்களுடன் கூடிய ஜேர்சியில் இலங்கை அணி வீரர்கள்(photo)

வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மீண்டும் சமிந்த