விளையாட்டு

நான்காம் நாள் ஆட்டம் இன்று

(UTV|சிம்பாப்வே) – இலங்கை அணிக்கும், சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

ஹராரேயில் இடம்பெறும் இந்தப் போட்டியில், சிம்பாப்வே அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் நான்காம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது.

Related posts

காயம் காரணமாக துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத சூழ்நிலை.

உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஹிஜாப் அணிய விதித்த தடைய நீக்கியது பிரான்ஸ்!