உள்நாடுவிளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

(UTV | சிட்னி) – இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 12 சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (05) சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தனர்.

இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் அவுஸ்திரேலியா அரையிறுதிக்கும், இங்கிலாந்து இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கும் தகுதி பெறும்.

நேற்றைய ஆட்டங்களில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் வெற்றி பெற்றதன் காரணமாக இலங்கை அணியின் அரையிறுதி நம்பிக்கை பறிபோனது.

நேற்றைய போட்டிகளின் முடிவுகளின் பின்னர் புள்ளிப்பட்டியலில் முதல் குழுவில் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதன்படி இன்று நடைபெறவுள்ள இலங்கை-இங்கிலாந்து போட்டியின் முடிவின் அடிப்படையில் முதல் குழுவிலிருந்து அரையிறுதிக்கு தகுதிபெறும் மற்றைய அணி தீர்மானிக்கப்படும்.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1015 பேர் கைது

மீண்டும் எகிறும் மின்கட்டண சுமை

ஜனாதிபதி அநுரவை பாராட்டிய ரணில் விக்கிரமசிங்க

editor