சூடான செய்திகள் 1

நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பிலேயே தமது இலக்கு – சஜித்

(UTV|COLOMBO) – நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப் போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

மொனராகலை பகுதியில் நேற்று(13) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சகோதரர்களையோ அல்லது குடும்பத்தையோ பாதுகாக்க வேண்டிய தேவையும் தமக்கு கிடையாது எனவும், நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பிலேயே தமது இலக்கு காணப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

கடந்த அரசாங்கம் இராணுவத்தின் காணிகளை வௌிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதாகவும், தமது அரசாங்கத்தில் இராணுவத்தினருக்கும், காவல்துறையினருக்கும் தனித்தனி கிராமங்கள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

கொழும்பு பாயிஸ் காலமானார்!

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பில்லை-வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு குப்பைகள் நவம்பர் முதல் புத்தளத்திற்கு…