உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் புளிக்கு தட்டுப்பாடு – வேகமாக அதிகரித்து வரும் விலை

நாட்டில் புளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதன் விலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கமாக அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் ஒரு கிலோ புளி, இன்று (12) ஹட்டன் பகுதியில் 2,000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்கப்பட்டது.

இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளிக்கான அறுவடை முடியும் வரை இந்தப் பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்து மக்கள் கறிகளைத் தயாரிப்பதில் புளியை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும், தைப்பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ளதால் இந்துக்கள் உணவுக்காக அதிகளவில் புளியை கொள்வனவு செய்து வருவதன் காரணமாகவும் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

அஞ்சல் பணியாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

ரயன் ஜயலத்தை கைது செய்ய உத்தரவு

மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை