உள்நாடு

நாட்டில் நாளாந்த மின் வெட்டு தொடரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், 2022 ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது.

அதன்படி வரும் ஜனவரி 24 ஆம் திகதி வரை எரிபொருள் இருப்பு தொடர்பில் மின்சார சபைக்கு பிரச்சினை இல்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரான எம்.ஆர். ரணதுங்க தெரிவித்தார்.

இந்நிலையில் , இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதியை இலங்கை மின்சார சபை பெற முடியாவிட்டால், மின் உற்பத்தியில் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் கூறினார்.

கடந்த சில வாரங்களாக இலங்கை மின்சார சபை பல செயலிழப்புகளுடன் போராடி வருகிறது, இது நடைமுறையில் உள்ள மின்சார விநியோகத்தை பாதித்துள்ளது.

இதுவரையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை இறக்குமதி செய் கடன் பத்திரங்களை வழங்குகிறது. எவ்வாறாயினும், மேலும் கடனில் எரிபொருளை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை மின்சார சபைக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

Related posts

வட மாகாண புதிய ஆளுநருக்கான வர்த்தமானி வெளியாகியது

நாமல் ஆட்சிக்கு வருவது கனவிலும் நடக்காது – நிமல் லான்சா எம்.பி

editor

அதிக விலைக்கு டைல்ஸ் விற்பனையா? அறிவிக்க தொலைபேசி இல