உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அசாதாரண நிலையே ஏற்பட்டுள்ளது [VIDEO]

(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்திற்கொண்டு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றுடையவர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்த சந்தர்பத்தில் நான் ஒரு விடயத்தை கூற வேண்டும். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அசாதாரணமான நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டிற்குள் வரும் சீனர்களுக்கு ஒரு சட்டமும் நம் நாட்டு பிரஜைகளுக்கு பிரிதொரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படகின்றது.

நாடு என்ற ரீதியில் இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் சமமான முறையில் நடாத்தப்பட வேண்டும். நம் நாட்டவர்களை மாத்திரம் தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவது பொருத்தமற்றது.

அதே போன்று இந்த சந்தர்பத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான முகக் கவசங்கள் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் நாம் கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி சர்வதேச கொரோனா அச்சுறுத்தல் மற்றும் எமது நாட்டினுள் ஏற்படும் தாக்கம் குறித்து கேள்வி எழுப்பினோம்.

இதற்கான சரியான விளக்கம் அப்போது கிடைக்கவில்லை. ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்திற்கொண்டு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

நாடு தற்போது அவசர நிலையொன்றை சந்தித்துள்ளது. இவ்வாறான இக்கட்டான நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் உள்ளது.

நாம் ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் மக்களின் நலன் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளோம். நாடு என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய சந்தர்ப்பாமாக இது அமைந்துள்ளது. என தெரிவித்துள்ளார்

Related posts

தீவிரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசேட வர்த்தமானி

மாலக சில்வா பிணையில் விடுதலை

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான தீர்மானம்!