உள்நாடு

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள்

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3,140 ஆக உயர்வடைந்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாம் கைதிகள் 9 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய 6 பேருக்கும், குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய 2 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 193 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில், கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,935 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நீங்களும் மேல்மாகாணத்தில் உள்ள கொரோனா தொற்றாளரா?

‘அடுத்த 6 மாதங்கள் மிகவும் கடினமானது’

விகாரையை நிறுத்திய கிழக்கு ஆளுனருக்கு எதிராக கொதித்தெழும் தேரர்கள்!