உள்நாடு

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையில்

(UTV|கொழும்பு ) – நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாகவும் குறித்த வழக்குகள் நீதிமன்றங்களாலேயே பிற்போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகள் தாமதமடைவது தொடர்பில் அனைத்து அதிகாரிகளின் பங்கேற்புடன் அண்மையில் நீதி அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் சுமார் 26,000 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் சிறைச்சாலைகளில் 12,000 பேருக்கான இட வசதிகளே காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இந்திய படகுகள் யாழில் ஏலம்

பாடசாலை பிரதி அதிபரைக் கடத்திய ஆசிரியரும் தம்பதியரும் கைது!

editor

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக 19 வழக்குகள் – வீடியோ

editor