உள்நாடு

நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்யுமாறு, அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வைத்தியசாலைகளுக்குத் தேவையான ஒட்சிசன், தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு தேவையான உபகரணங்கள் போன்ற உதவிகளை வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான விபரங்களை கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களின் பிரதானிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

அரச மருந்து விநியோக பணியில் தபால் ஊழியர்கள்

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து!

“வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை தரவும் “– திஸ்ஸ