உள்நாடு

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு மீதான தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு மீதான தாக்கம் எதிர்வரும் காலங்களில் மோசமடையக்கூடும் என்பதால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.

எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய டாலர்கள் தேவைப்படுவதால், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கடுமையாக
கட்டுப்படுத்துமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, இறக்குமதி கட்டுப்படுத்தப்பட வேண்டிய அத்தியாவசியமற்ற பொருட்களின் மூன்று பட்டியல்களையும் மத்திய வங்கி நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. இதில் இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அத்தியாவசிய தேவையற்ற பொருட்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திறந்த கணக்கு முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் பொருட்களை விற்பனை செய்த பின்னர் பணமாக செலுத்துவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்குமாறும் மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

Related posts

‘இந்தியா அசுத்தமானது’ – ட்ரம்ப் பேச்சில் சர்ச்சை

வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்

நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு விளக்கமறியல்!