சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை

(UTVNEWS|COLOMB0) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் தினைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

விசேட செயலணிக்கான வர்த்தமானி அறிவிப்பு

(UPDATE)-பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டது

உடவளவ தேசிய சரணாலயத்திற்கு புதிய நுழைவாயில்