அரசியல்உள்நாடுவீடியோ

நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் – MP க்கள் கொலை செய்யப்பட்டால் சபாநாயகரே பொறுப்பு – தயாசிறி ஜயசேகர எம்.பி | வீடியோ

நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது கொல்லப்பட்டால் அதற்குச் சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர் நாடாளுமன்ற சபாநாயகர் என்றும், ஒரு உறுப்பினருக்கு ஏதாவது நடந்தால் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.

பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் உரையாற்றுகையில்,

“நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. உறுப்பினர்களின் பாதுகாவலர் சபாநாயகர். உறுப்பினர்களின் உயிருக்கு ஏதாவது நடந்தாலோ அல்லது அவர்கள் கொலை செய்யப்பட்டாலோ சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும்.

எங்களுக்குப் பாதுகாப்பு தேவையில்லை. ஆனால், எந்த துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இல்லை” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறினார்.

வீடியோ

Related posts

கடலில் அடித்துச் செல்லப்பட்ட 13 பேர், 12 பேர் மீட்பு – ஒருவரை காணவில்லை

editor

23ம் திகதி விசேட விடுமுறை

editor

இன்றுடன் நிறைவடையும் தபால் சேவை வேலை நிறுத்தம்!