உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

(UTV|கொழும்பு)- கம்பஹா காலி ஹம்பாந்தோட்டை மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் தேர்தல் ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய வாக்களிப்பை நடத்துவது குறித்து விளக்கமளிப்பதற்காக இந்த தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் நீர்கொழும்பு கல்பிட்டிய கொடபொல லுனுகம்வெஹர ரத்தோட்டை திம்புலாகல ஆகிய பிரதேசங்களிலும் தேர்தல் ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் , மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரவி உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேருக்கும் விளக்கமறியல்

கட்சி விட்டு கட்சி பாய்பவர்களை கட்சிக்குள் அனுமதிக்க முடியாது – ஏ.சி.யஹ்யாகான்.

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி பலி – பாணந்துறையில் சோகம்.