உள்நாடு

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) –   தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று(25) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய, வடகிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வபோது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில், மேற்குறிப்பிடப்பட்ட பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான, பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரிஷாதின் பாராளுமன்ற வருகைக்கு சபாநாயகர் விருப்பம்

W.M. மெண்டிஸ் நிறுவன உரிமத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

திருடர்களுடன் நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்பதால் தான் நாம் பொறுப்பை ஏற்கவில்லை – சஜித்

editor