உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Related posts

பெரியநீலாவணைப் பகுதிகளில் அதிகரிக்கும் மணல் கடத்தல் சம்பவங்கள்!

அதிவேக வீதியூடான போக்குவரத்து மட்டு

பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிப்பு!