உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக வெப்பம் நிலவக்கூடும்

(UTV|கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் அதிக வெப்பம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், வட மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.

32 – 41 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மக்கள் அவதானமாக செயற்படுமாறும் இந்தக் காலப்பகுதியில் அதிக நீரை பருகுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்

ப்ரான்ஸில் குர்ஆன் அவமதிப்பால் சர்ச்சை : உலமா சபை கண்டனம்

நாட்டை வந்தடையும் சீன ஆராய்ச்சிக் கப்பல்!