சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை

(UTV|COLOMBO) நிலவுகின்ற மழையுடன் கூடிய வானிலையில் இன்றும், நாளையும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் திருகோணமலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

மழையுடனான காலநிலை