உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை

(UTV | கொழும்பு)- நாட்டில் தற்போது காணப்படும் வானிலை இன்று மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, நேற்று(08) காலை 8.30 மணி முதல் இன்று (09) அதிகா​லை 4.30 மணி வரையான காலப்பகுதியில் 121 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கொழும்பில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாவனெல்ல சாஹிரா, காஸா சிறுவர் நிதியத்திற்காக நிதி உதவி!

வளர்ச்சிக்குப் பதிலாக, துப்பாக்கிச் சூட்டைப் பார்க்கிறோம் – நான் கைது செய்யப்பட்டாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை – நாமல் எம்.பி

editor

பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திடீர் மரணம்!