சூடான செய்திகள் 1

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை

(UTV|COLOMBO)-தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை மேலும் விரிவடைந்து வருகிறது.

இதனால் இன்றும் நாளையும் நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் கடுமையான மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடிமின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மழையுடனான வானிலையால் உடப்புஸலாவை – கல்கொட்டுவ பிரதேசத்தில் முச்சரக்கர வண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது நேற்று இரவு மரம் முறிந்து வீழ்ந்ததாக காவற்துறையினர் தெரிவித்தள்ளனர்.
இதேவேரளம், தேசிய கட்டிட ஆய்வு பணிமனையினால், ரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எல்ல மற்றும் பண்டாரவளை ஆகிய இடங்களுக்கு இடையில் தொடருந்து பாதையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு – பதுளை இரவு நேர தொடருந்து சேவை பாதிக்கப்பட்டதுடன், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி நேற்று பயணித்த உடரட்ட மெனிக்கே தொடருந்து பண்டாரவளை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

பூஜித் ஜயசுந்தரவின் மனு ஒத்திவைப்பு (UPDATE)

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு (UPDATE)

பளை பகுதியில் மேலும் இருவர் கைது