அரசியல்உள்நாடு

நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பிற்காக எதிர்க்கட்சி முன்நிற்கும் – சஜித் பிரேமதாச

எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆட்சியே நாட்டில் தற்சமயம் காணப்படுகின்றது.

இந்த தேசிய பாதுகாப்பில் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அபிவிருத்தி செயல்முறைகள் என்பன உள்ளடங்குகின்றன.

ஒரு நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் விடயத்தில் பாதுகாப்பும் அடங்குகிறது.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நீதிமன்றங்களிலும் மனித படுகொலைகள் அரங்கேறி, கொலையாளிகள் கோலோச்சும், நீதியிலும், நியாயமும் மேலோங்காத, காட்டுச் சட்டமே நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொருளாதார பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வகையான பாதுகாப்பையும் சீர்குலைக்கும் அரசே நாட்டில் இன்று காணப்படுகின்றது.

நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பிற்காக எதிர்க்கட்சி முன்நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுதாக்கல்

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

திங்களன்று கடவுச்சீட்டு விநியோகம் வழமைபோல் நடைபெறும்