சூடான செய்திகள் 1

நாடுமுழுவதும் பிரதானமாக சீரான வானிலை…

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து பாடசாலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை நாடுமுழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்

தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

1990 சுவசெரிய’ சேவை மத்திய மாகாணத்திலும் ஆரம்பம்