உள்நாடு

நாடு முழுவதும் மழையுடனான வானிலை

(UTV|கொழும்பு )- இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இதன்படி, இன்று(31) கரடிக்குழி, கப்பச்சி, நேரியகுளம், பூனாவ, பண்டிக்கம, அம்பகஸ்வெவ, கன்னியா மற்றும் உப்புவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்ப டுகின்றன.

Related posts

பிரேமலால் ஜயசேகரவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி

உறுமய தேசிய செயற்பாட்டு செயலகம் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் திறந்து வைப்பு!

அனைத்து முன்பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை