உள்நாடு

நாடு முழுவதும் திடீர் மின் தடை – ரயில் போக்குவரத்தும் பாதிப்பு

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, ரயில்வே கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயல்பாட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, ரயில் போக்குவரத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ரயில் குறுக்கு வீதிகளின் பாதுகாப்பு கடவைகளை செயற்படுத்துவதிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மின் தடை காரணமாக ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related posts

துருக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இரங்கல் நிகழ்வு

உக்ரைன் இராணுவத்தில் இணைய ஆர்வம் காட்டும் இலங்கை படையினர்!

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

editor