வகைப்படுத்தப்படாத

நாடு பூராகவும் போராட்டத்திற்கு தயாராகும் நீர் விநியோக ஊழியர்கள்

(UTV|COLOMBO)-தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு இதுவரை சரியான தீர்வு கிடைக்காததன் காரணமாக இன்றைய தினம் நாடு பூராகவும் நான்கு மணி நேர தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சர் தலையிட்டு தமது கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்று நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்னாயக்க கூறினார்.

இதேவேளை, காணப்படுகின்ற நிதி நிலமைக்கு அமைவாக நூற்றுக்கு 17.5 வீத சம்பள அதிகரிப்பை வழங்க உடன்பட்ட போதும், தொழிற்சங்கம் அதனை நிராகரித்துள்ளதுடன், 25 வீத சம்பள அதிகரிப்பை கோரியுள்ளதாக, அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் வழங்கல் சபையில் தற்போது இருக்கின்ற நிதி நிலமைக்கு அமையவும் ஏனைய செலவுகளை கருத்திற் கொண்டும், நியாயமான சம்பள அதிகரிப்புக்கு உடன்படுமாறு கேட்டுக் கொண்டதை தொழிற்சங்கம் நிராகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்கும் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில், அனைத்து தொழிற் சங்கங்களும் ஊழியர்களும் செயற்படுவார்கள் என்று நம்புவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Update: வடமத்திய மாகாண சபை முதலமைச்சருக்கு எதிரான சத்தியகடதாசி நிராகரிப்பு

அந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

400 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு